Tuesday, October 29, 2013

இன்று புதிதாய் பிறந்தோம் !!



ஒவ்வொரு தேடலும் ... ஒவ்வொரு சுவாசமும் ....
ஒவ்வொரு தீண்டலும் ... ஒவ்வொரு வெற்றியும் ....

சில நீங்காத நினைவுகளை
என்னில் விதைத்து...

நாளைய வரலாற்றின் முகப்புரையாய் ......
இன்றைய என் வாழ்வை அலங்கரிக்க.....

ஒவ்வொரு தருணமும் புத்தம் புதிதாய் தோன்றிட .....
இனிதாய் ஒரு பயணம் .......

இன்று புதிதாய் பிறந்தோம் !!
எனும் உணர்வோடு .......

Wednesday, June 26, 2013



வெண்ணிலா  தண்ணொளி வீசி
பொன்மலர் கூந்தலேறி ......

புன்னகை அரும்பி  நிற்க
மன்னவன்  வருகையென்றோ ?

நினைவுகள் மனதில் ஓட
முகத்திரை - அதில்  நான் காண

தயங்கி நீ அருகில் வாராய் ....
தலைவியே - என்னுயிர் கோதாய் ............

Friday, September 30, 2011

அன்பு சகோதரிக்கு ஒரு வாழ்த்து மடல்



கலைமகளின் உருவான தலைமகளே

திருமொழிகள் பல கூறும் நல்லறிவே

பாரினிலே பல கலைகள் நீ கற்று
பண்போடும் அன்போடும் வாழ்ந்திடவே

திரளான செல்வங்களை நீ அடைந்து
தினந்தோறும் சுகமாக வாழ்ந்திடவே

சரித்திரத்தில் உந்தன் பெயர் இடம்பெறவே
செயல்கள் யாவும் செம்மையாக சிறந்திடவே

முப்பத்து முக்கோடி தேவர்களும்
உன்னை வாழ்த்தும் நாளாம் இந்நன்னாளில்
மனதார வாழ்த்துகிறேன் தாரகையே !!!

Friday, April 9, 2010

மலர்களின் மகத்துவம்





மிதமான காற்று இதமான உன் தேகம் பற்றி செல்ல

அதிகாலை மலர்ந்த பூக்கள் உன் கூந்தல் ஏறி நிற்க

சில நிகழ்வுகள் மட்டும் வாழ்வின் இறுதி வரை

அகலாமல் மனதில் அமர்ந்து விடும் புதையலாய் ......

உன் ஓசை இல்லா மொழிகள்

என் வசம் காட்டி செல்லும் புன்னகையில் !!!

குளிர் காற்று சில்லென தேகம் சிலிர்க்க

கார்மேகம் கதிரவன் முகம் மறைக்க .......

ஈர நிலம் என்னவள் பாதம் நனைக்க ..

சாலையில் ஆறாய் நீரும்.....

பாரினில் மண்வாசம் படர்ந்து செல்ல ..........

கண்ணிமைத்த சில தருணங்களில் ...

எத்தனை எத்தனை மாற்றங்கள் ???

Friday, November 13, 2009







ஓ!!!
மழையே


கருமுகிலின் திரள் நடுவே ....
நீர்த்துளிகள் இடம் பெறவே ...........

வறண்ட நிலம் வளம் பெறவே ..........
விவசாயி வாழ்வுறவே.........

உலக மக்கள் உணவுறவே..........
வசந்த காலம் தொடங்கிடவே ..........

உன் முத்தான நீர்த்துளிகள் ............
மண்ணை முத்தமிட .................

காதலர்கள் நனைந்திடவே .....................
மழலைகள் வீதி நீரில் கப்பல் விடவே ...............

காற்றும் அது குளிர்ந்திடவே.......................
என்னவளின் திருவாய் மலர்ந்து ......

ஹேய் மழை பெய்யுதுடி எனும்
கவிதை மொழி கூறிடவே ........

மரங்களின் நடுவே மழை துளிகள்
உதிர்த்து சென்ற நீரில் நனைந்த இலைகள் !!!

என்னவளின் வருகையை நோக்கி
வீசிய தென்றலால் சிலிர்த்த .......................

ஒன்றிரண்டு நீர் திவலைகளால் ......
என்னவளின் தேகம் சிலிர்க்க ......
வியர்த்து கொட்டியது மழைக்கு......

Friday, August 7, 2009

வாழ்த்துங்கள் என் தோழியை .....




எழுத்துக்களில் அகரமாய்
என்றுமே நீ சிகரமாய்

மலரினும் மெல்லிய மனதோடும்
தீயினும் மிக்க துணிவோடும்

தென்றலாய் சிலிர்த்து
சூறாவளியை எதிர்த்து .....

திசைதோறும் புகழ் மணக்க
இசையாக நீ இனிக்க

இன்புற்று வாழ்க !!!!
இனிதே வாழ்வாங்கு வாழ்க !!!

Wednesday, August 5, 2009

ஒற்றை ரோஜா !!!

மௌன மொழி பேசும் பூவே !!!

குயில் பாடும் கானம் உன் குரலாய் .....

தென்றல் உன் சுவாசமாய் .....

மயில் சூடும் தோகை உன் கூந்தலாய்......

கடலோடு நதியும் ஒன்றாக சங்கமிக்கும்

ஆற்று படுகைகளின் கரையோரத்தில் ......

முழுமதியின் அரவணைப்பில் .....

திருமகளின் ஒளிமுகத்தை காண.....

கரை ஒதுங்கும் அலைகளுக்குள்

இத்தனை போட்டியா?

இல்லை என்னவளின் கான குரலை

மொழி பெயர்க்கும் முயற்சியா?

Thursday, June 4, 2009

திரும்பி பார்க்கிறேன்.....




காவிரி கரையில் கரை புரண்டோடும் நீரில்
தாவி ஓடி குதித்து மகிழ்ந்தாடி

காடுகள் செழிக்க பரவிய ஓசையாய்
கண்கட்டு வித்தை ஆடிய மரத்தடிகள்

பூங்குயில் இசைக்கும் கூ ..... கூ ..... பாடல்கள்
வெள்ளை முயலோடு செல்ல யுத்தங்கள்

ஆற்று மீன்களுடன் ஆடல் நிகழ்வுகள் ....
சேற்று தவளைகளின் கூவல் ஒலிகள்

சாரல் மழையில் குளிர் நடுக்கங்கள்
மரங்களின் அடியில் மந்தை கூட்டங்கள்

சோலை மணம் பரப்பும் பூங்காவனம் - அதிலே
மாலை மணம் பரப்பும் மங்கையர் கூட்டம்

காண்பார் மனம் பறிக்கும்
காட்சி முதல் தருவே !

சலங்கை ஒலி முழக்கம்
மங்கையர் தம் நகையே !


சிரித்த முகத்தோடு

கருத்து பரிமாற்றங்கள் ..........

கண்களால் மட்டும் ....

தெவிட்டாத இன்பமாய்
விடலை பருவ நிகழ்வுகள்
அகலாமல் என் மனதில்
அமர்ந்து விட்ட புதையலாய் ............
திரும்பி பார்க்கிறேன் ...............

அவள் விழிகள் ......






கன்னியின் கருவிழியும்
கதிரவன் தம் சுடர் விழியும்

சமம் தானோ?
கணநேரம் சிந்திப்போம் ....

காற்றுக்குள் ஊற்றாகி
கவிதையே தேனாகி

ஏற்கும் திறன்களெல்லாம்
உமக்குள் உருவாக

உனை நினைந்தேன் ...
எனை மறந்தேன்

ஒரு போதும் உனை கடக்க
பரிதவிக்கும் பகல் - இரவு

பார்த்த பின் உணரும் தன்
தோற்றத்தை ......

யுத்த களத்தில் ரத்த நதியாய்
(ஏ)மாற்றி விடாதே வாழ்கை பயணத்தை .......

Thursday, May 14, 2009

நம்பிக்கையின் விழுதுகள்

கொள்கையால் வீரனாக்கி

மென்மையால் ஞானியாக்கி

பாரினில் புகழை ஏத்தி

பரப்பினாய் மனதில் போற்றி .......

சினந்தரும் மனதை தகைத்து

பயம் எனும் நினைவை அறுத்து

பலரும் உன் தோழைமை போற்ற

நல்கிய நம்பிக்கையே !!!

சிலையினில் வடிவம் கண்டாய்

சீர்மேவும் கலைகள் கொண்டாய்

யுக்தியால் விண்ணை அளந்தாய் ....

உலகினில் முடியும் உன்னால்

உணர்ந்து நில் ......

உலகம் உன் பின்னால் ........

Sunday, May 3, 2009

நட்சத்திரங்கள் .........




வானைத் துளைத்த
உன் பார்வை தோட்டாக்கள் ..........

Friday, April 24, 2009

திங்களை தேடி ........

வேரின் நுனி நல்கும் கூரியதாய்...

பாறைகளை ஊடுருவி காலுன்றும்......

நும் பாச மொழிகளாம் கணைகள்

எம் இருதய தவிப்பினை இடையறுக்க ......

விண்ணை நோக்கி வளரும் கிளைகளாம்

பசுமை இலைகளாம்

உன்னை பற்றிய மேலான சிந்தனைகள்

என்னுள் உணர்வுகளாய் ஊடுருவ....

தேனின் சுவை ததும்பும்

வாடாமணங்கமழும் மலர்களாம் ......

நும் செவ்விதழ்கள் செதுக்கிய தேன்மொழிகள்

எம் செவி நிறைக்க ........

மாறாத ஒளியுடைய சூரியனாய்....

பாரில் யாவரிடத்தும் .......

மாறாத முக மலர்வால்

எனில் மட்டும் குளிர் நிலவாய் ........

தேடாத நாட்கள் இல்லை

என் கனவில்.......

தேவதையே எங்கு நீயோ ????

தேடுகிறேன் நாளும் நானும் !!!!

Tuesday, April 21, 2009

ஒரு நாள் என் கனவில்.....




காதல் எனும் கடலில் ...
நட்பு எனும் கப்பலில்
நாம் பயணித்த போது
சாதி எனும் புயல் தாக்கவே
சமுத்திரமும் வறண்டு போய் ...
பாலைவனமாய் தோன்றியது .....
அப்போது தான் அறிந்தேன் அன்பே !!!
நாம் பயணித்தது கானல் கடலிலே !!!!!

கண்ட நாள் முதல் ........




பருவ மோதல்களின் பனித்துளிகள்...
ஒரு சேர உனை அழைக்கும் .....
கருவறையிலிருந்து பிறந்தது போல் உணர்ந்தேன் -
உனை கண்ட நாள் முதல் .....

மாறாத வாழ்வில் மாற்றத்தை ஏற்றினாய் ....
மாற்றமுள்ள வாழ்வில் ஏற்றத்தை ஊற்றினாய் ......

நாடியின் வீதியில் ஓடும் ஜீவநதி
நொடி நின்று....
உடலே சிலிர்த்தது ....
நீ எனை கண்ட நாள் முதல் ...

கண்களால் உறவாடி ....
சிரிப்பிலே நடமாடி ...
கலைந்த பின் உணர்ந்தேன் ......

மாயையின் மோகத்தீ காதல் .....
உணர்ந்தேன் .....
வெளி வர இயலவில்லை ஏன்?



கானல் கனவுகள்........




துகில் மிகு மேரு மலை
சல சலக்கும் சிற்றோடை ....
மணங்கமழும் பூஞ்சோலை
மயிலும் அங்கு அகவலிடும் .....
மானும் அங்கு துள்ளி ஓடும்
நடந்து வரும் பாதை எல்லாம் .....
நந்தவனமாய் நீ அமைத்து
தென்றல் தாங்கி வரும் .....
திருமேனி பெருங்கமழே !!!
திவ்யதேசமே !!!
விண்ணகத்தே வெள்ளி விழா !!!!!
தேவமகள் காணும் உலா !!!!!
அமைதி விளக்கில் ஆரவார விளக்கேற்றி
அரங்கேரியதொரு அற்புத திருவிழா!!!
காக்கை தன் கூட்டினின்றுசிறகடித்து பறந்தது ....
கதிரவன் தன் செங்கதிரை காட்டினான்
என் முகத்தில் கனவு கலைந்தது ....
காலை பிறந்தது .....

Monday, April 20, 2009